ஸ்ட்ரைக்கர்- விமர்சனம்

கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஒரு சமயத்தில் ஒரு காரை முழுமையாக பழுது நீக்கம் செய்யும் முன்பே கார் டெலிவரி செய்யப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் அந்த காரை எடுத்து என்ற உரிமையாளர்கள் பிரேக் இல்லாத காரில் சென்றதால் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். ஜோஷி அதற்காக வருந்துகிறார். ஒரு சமயம் அவனது நண்பர்கள் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஆர்வமுள்ள ஜோஷி, அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்கிறார்.இதன் மூலம் தன் காதலிக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வழியில் உதவச் செல்கிறான். அப்போது அங்கு எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது, அந்த சம்பவத்தால் ஜோஷியும் அவரது காதலியும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். கடைசியில் பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை… 

படத்தின் பிளஸ்

 ➡கதை 
➡ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்

➡ திரைக்கதை
➡பின்னணி இசை

நல்ல கதைக்களத்தை தேர்தெடுத்த இயக்குனர் திரைக்கதை மட்டும் உருவாக்கத்தில் சரியாக இல்லாததால் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் தொய்வடைகிறது

About Karthik

Check Also

தீயவர் குலை நடுங்க – விமர்சனம்

மலையாளத்தில் சமீப ஆண்டுகளில் வந்த பல திரில்லர் படங்கள் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றதால், தமிழ் சினிமாவிலும் புதிய இயக்குனர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *